பிரபல தமிழ் நடிகரின் மனைவியை கட்டி போட்டு 200 பவுன் நகை கொள்ளை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

  • IndiaGlitz, [Friday,November 11 2022]

பிரபல தமிழ் நடிகரின் மனைவியை கட்டி போட்டு 200 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் இரண்டு லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவான ‘அவன் இவன்’ என்ற படத்தில் வில்லனாகவும் ’எல்லாம் அவன் செயல்’ ’புலிவேஷம்’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்தவர் நடிகர் ஆர்கே என்று அழைக்கப்படும் ராதாகிருஷ்ணன்.

இவர் சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் இவருடைய மனைவி ராஜி சமீபத்தில் வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர்கள் 3 பேர் வீட்டினுள் புகுந்து ராஜியை கட்டிப் போட்டுவிட்டு 200 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் இரண்டு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது இந்த கொள்ளையில் ஆர்கே வீட்டின் காவலாளியும் உடந்தை என்று என்பது சிசிடிவி கேமராவில் உள்ள காட்சிகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து காவலாளி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

'என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள்': 'வாரிசு' இசை வெளியீட்டு விழா எப்போது?

 சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் அதே போன்று பிரமாண்டமாக 'வாரிசு'  படத்தின் ஆடியோ

விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

 விஷ்ணு விஷால் நடித்த 'கட்டா குஸ்தி' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி

சென்னை மழையில் நனைந்த ஷிவானியின் காந்தப்பார்வை: வீடியோவை பார்த்து சொக்கி போன ரசிகர்கள்!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார்

23 ஆண்டுகளுக்கு பின் பிரபல நடிகரின் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!

தமிழ் திரையுலகில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட கிட்டத்தட்ட அனைத்து பிரபல நடிகர்களின் படங்களுக்கும் இசை ஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது தெரிந்ததே.

நம்ம ஆட்டத்தை டோட்டலா கலைச்சு ஆடுனது அவன் தான்: 'கலகத்தலைவன்' டிரைலர்

உதயநிதி ஸ்டாலின் நடித்து முடித்துள்ள 'கலகத்தலைவன்' திரைப்படம் இம்மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளி ஆகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது.