close
Choose your channels

'என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள்': 'வாரிசு' இசை வெளியீட்டு விழா எப்போது?

Friday, November 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் அதே போன்று பிரமாண்டமாக ‘வாரிசு' படத்தின் ஆடியோ இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா என்றாலே விஜய்யின் நேர்மறையான பேச்சு, குட்டி ஸ்டோரி குறிப்பாக ‘என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள்’ ஆகியவற்றை கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

விஜய் நடித்த முந்தைய படமான ’பீஸ்ட்; படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யின் ‘வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.