close
Choose your channels

கவினின் 'ஸ்டார்' திரைப்படத்தில் கேமியோ ரோலில் பிரபலம்.. யாராக இருக்கும்?

Wednesday, May 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் திரையுலக பிரபலம் ஒருவர் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக கூறப்படும் நிலையில் அந்த பிரபலம் யாராவது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கவின் நடிப்பில், இளன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய ‘ஸ்டார்’ திரைப்படத்தின் டீசர், டிரைலர் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படம் நிச்சயம் கவினுக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய பிரபலம் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டாலும் கேமியோ ரோலில் நடிப்பது யார் என்பதை படக்குழுவினர் சஸ்பென்ஸ் ஆக வைத்திருப்பதாகவும் படம் வெளியாகும் தினத்தில் தான் இந்த தகவல் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் கவின் அளித்த பேட்டியில் ‘ஸ்டார்’ படத்தில் தனது நடிப்பை சிம்பு பாராட்டியதாக கூறிய நிலையில் அநேகமாக சிம்பு தான் கேமியோ கேரக்டரில் நடித்திருப்பார் என்றும் அது மட்டும் இன்றி நெல்சன் உள்பட வேறு சில பிரபலங்களும் நடித்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருத்துக்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பது யார் என்பதை வரும் வெள்ளியன்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.