close
Choose your channels

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த செய்தி வாசிப்பாளரா?

Wednesday, August 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே பாத்திமா பாபு, அனிதா சம்பத், லாஸ்லியா உள்ளிட்ட செய்தி வாசிப்பாளர்கள் கலந்து கொண்ட நிலையில் விரைவில் தொடங்க இருக்கும் 7வது சீசனிலும் ஒரு செய்தி வாசிப்பாளர் கலந்து கொள்ள இருப்பதாகவும் ஆனால் அவர் ஆண் செய்தி வாசிப்பாளர் என்றும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் 6 சீசன்கள் முடிவடைந்து விரைவில் 7வது சீசன் தொடங்க இருக்கும் நிலையில் வரும் செப்டம்பர் மாதம் இந்த நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே 6 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் 7வது சீசனையும் தொகுத்து வழங்க இருப்பதாகவும் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவின் படப்பிடிப்பு நடந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலம் ஜாக்குலின் , கடந்த சீசனில் கலந்து கொண்ட ரக்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர், நடிகர் பிருத்விராஜ், கோவை சேர்ந்த பெண் டிரைவர் ஷர்மிளா உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி பாலிமர் செய்தி செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ரஞ்சித் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் எப்படி வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment