ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த 10 நிமிட பாடல்.. பிரபல நடிகை தகவல்

  • IndiaGlitz, [Saturday,January 07 2023]

பொதுவாக ஒரு பாடல் என்றால் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கும் என்பது தெரிந்ததே. ஆனால் ஜிவி பிரகாஷ் ஒரு திரைப்படத்திற்காக 10 நிமிட பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ளதாக பிரபல நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி’ என்ற தமிழ் படத்தில் நடித்தவரும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையுமான கங்கனா ரனாவத் தற்போது ’எமர்ஜென்சி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் கங்கனா ரணவத், இந்திராகாந்தி கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அனுபம்கெர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் என்பதை கூறியுள்ள கங்கனா ரணாவத் இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் என்றும் அதில் ஒரு பாடல் நீளமான 10 நிமிட பாடல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

ஏஆர் ரஹ்மானை வாழ்த்த குவிந்த ரசிகர்கள்: மகள் செய்த நெகிழ்ச்சியான செயல்!

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

'குக் வித் கோமாளி' சீசன் 4: இந்த பிரபலம் கோமாளியா?

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி என்பதும் இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள்

மீரா ஜாஸ்மினா இது? கோல்டன் தேவதையாக மாறிவிட்டாரே...

நடிகை மீரா ஜாஸ்மின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 40 வயதிலும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய நிலையில் தற்போது திடீரென கோல்ட் கலரில் சேலை அணிந்து

மீண்டும் ஒரு குட்டி ஸ்டோரியா? விஜய் கலந்து கொள்ளும் 'வாரிசு' புரமோஷன் நிகழ்ச்சி!

தளபதி விஜய் தனது ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என்றும் அவரது குட்டி ஸ்டோரி உள்பட சுவராசியமான பேச்சை கேட்பதற்காகவே ரசிகர்கள் காத்திருப்பார்கள் என்பதும் தெரிந்ததே.

'துணிவு' 'வாரிசு' முதல் நாள் முதல் காட்சி எப்போது? பரபரப்பு தகவல்

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக வரும் 11-ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக