close
Choose your channels

மீரா ஜாஸ்மினா இது? கோல்டன் தேவதையாக மாறிவிட்டாரே...

Saturday, January 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மீரா ஜாஸ்மின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 40 வயதிலும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய நிலையில் தற்போது திடீரென கோல்ட் கலரில் சேலை அணிந்து அழகிய அழகிய தேவதையாக காட்சி அளிப்பது பெரும் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

விஜய் நடித்த ’புதிய கீதை’ விஷால் நடித்த ’சண்டக்கோழி’ மாதவன் நடித்த ’ரன்’ உள்பட பல தமிழ் படங்களிலும் நடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் தற்போது திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கிறார் என்றும் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு லைக்ஸ்களை குவித்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

கடந்த சில நாட்களாக அவர் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது என்றும் கிளாமரில் உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கும் அவரது புகைப்படங்கள் குறித்து ஏராளமான கமெண்ட்கள் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் தங்க நிறத்தில் சேலை காஸ்ட்யூம் அணிந்த அழகிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ள நிலையில் அவரை ’கோல்டன் தேவதை’ என ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வரும் நிலையில் தொடர்ந்து இதே போன்று போட்டோஷூட்களை எடுங்கள் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.