பிச்சைக்காரன் படத்தை போல் நடந்த நெஞ்சை நெகிழ செய்யும் உண்மைச்சம்பவம்

  • IndiaGlitz, [Tuesday,October 10 2017]

விஜய் ஆண்டனி நடித்த வெற்றி படமான 'பிச்சைக்காரன்' படத்தில் தனது அம்மா குணமாக வேண்டும் என்பதற்காக கோடீஸ்வரரான விஜய் ஆண்டனி பிச்சைக்காரனாக ஒரு வேண்டுதலுக்காக நடிப்பார். இதேபோல் ஒரு உண்மைச்சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த நடராஜன் என்ற கோடீஸ்வரருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு மட்டும் திருமணமான நிலையில் மருமகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நடராஜன் வீட்டை விட்டு யாரிடமும் சொல்லாமல் வெளியேறினார். தமிழகம் முழுவதும் கோவில் கோவிலாக சுற்றிய நடராஜன், இறுதியில் சென்னை அருகேயுள்ள திருப்போரூர் முருகன் கோவிலில் தஞ்சம் அடைந்தார்.

அங்கு அவர் கோவிலில் தரும் அன்னதானம், பக்தர்கள் தரும் சாப்பாட்டை சாப்பிட்டு சுமார் மூன்று மாத காலம் தங்கியிருந்தார். இந்த நிலையில் நடராஜனின் மனைவி மற்றும் மகன்கள் நடராஜனை தமிழகம் முழுவதும் தேடி இறுதியில் திருப்போரூர் வந்தனர். அங்கு தாடி மீசையுடன் அடையாளம் தெரியாத வகையில் இருந்த நடராஜனை கண்ட அவரது மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். நடராஜனின் மனைவியும் தனது கணவர் கிடைத்துவிட்டதை அறிந்த ஆனந்தக்கண்ணீர் விட்டார். பின்னர் குடும்பத்தினர் கெஞ்சி கேட்டுக் கொண்டதற்கு இணங்க மீண்டும் வீட்டுக்கு வர சம்மதித்தார். கோடீஸ்வரர் ஒருவர் மூன்று மாத காலம் தங்கள் பகுதியில் பிச்சைக்காரர் போல் வாழ்ந்ததை கண்டு அந்த பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்

More News

விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் படத்தின் இயக்குனர் அறிவிப்பு

சீயான் விக்ரம் அவர்களின் திரையுலக வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய படம் 'சேது'. இயக்குனர் பாலா இயக்கிய இந்த படத்திற்கு பின்னர்தான் அவருக்கு சியான் என்ற செல்லப்பட்டமும், ரசிகர்களின் அன்பும் கிடைத்தது

மாயோன்: தளபதியின் மெர்சலுக்கு கிடைத்த திடீர் போனஸ்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

கார்த்தி-கவுதம் கார்த்திக் படத்தின் சுவாரஸ்யமான டைட்டில் அறிவிப்பு

முதல்முறையாக நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் இணணந்து நடிக்கும் படம் ஒன்றை இயக்குனர் திரு இயக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

பிரதமரிடம் ரஜினி, கமல் பேச வேண்டும். பிரபல இயக்குனர் கோரிக்கை

கோலிவுட் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகமே ஆன்லைன் பைரஸி, திருட்டு டிவிடி ஆகிய பிரச்சனைகளால் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு திரைத்துறைக்கு ஜிஎஸ்டி

'சண்டக்கோழி 2' படப்பிடிப்பில் மயில்சாமி செய்த மகத்தான காரியம்

தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சலால் பலியாகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது