close
Choose your channels

ஜோவிகா எவிக்சனில் திடீர் திருப்பம்.. மீண்டும் ஒரு வாய்ப்பா?

Sunday, December 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஜோவிகா வெளியேறி விட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியான நிலையில் தற்போது அதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் மிகவும் குறைந்த வாக்குகள் பெற்ற ஜோவிகா இந்த வாரம் வெளியேறி இருப்பதாக கூறப்பட்டது. கமல்ஹாசன் முதல் புரோமோவில் வெளியேறும் போட்டியாளர் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார்.

ஆனால் ஜோவிகா தாயார் வனிதா, ‘ஜோதிகா இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்றும் அவரிடம் இருந்து எந்த போன் காலும் வரவில்லை என்றும் குறிப்பிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனால் அவர் சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சுஜா, வைஷ்ணவி, சேரன் ஆகிய மூன்று போட்டியாளர்கள் சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டிருந்தனர். கடந்த மூன்று சீசன்களாக சீக்ரெட் ரூம் பயன்படுத்தப்படாத நிலையில் இந்த சீசனில் ஜோவிகாவிற்காக சீக்ரெட் ரூம் பயன்படுத்தப்பட்டு மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க பிக் பாஸ் முடிவு செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சீக்ரெட் ரூமில் ஜோவிகா வைக்கப்பட்டுள்ளாரா? மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வருவாரா? அல்லது எவிக்சன் செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.