படம் ஆரம்பிக்கும் முன்னரே வந்த எச்சரிக்கை: என்ன செய்ய போகிறார் சூர்யா பட இயக்குனர்?

  • IndiaGlitz, [Wednesday,July 27 2022]

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ பட இயக்குனர் ஞானவேல் சமீபத்தில் ’தோசா கிங்’ என்ற திரைப்படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளதை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க்கும் முன்னரே இந்த படத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ஆனால் அதே நேரத்தில் இந்த படம் பல பிரச்சனைகளை சந்தித்தது என்பதையும் பார்த்தோம். குறிப்பாக காலண்டரில் உள்ள ஒரு குறிப்பிட்ட புகைப்படம் தங்களை அவமதிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி குற்றம்சாட்டிய நிலையில் இந்த சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ‘ஜெய்பீம்’ ஞானவேல் சமீபத்தில் சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி வழக்கு சம்பந்தமாக கதையம்சம் கொண்ட 'தோசா கிங்’ என்ற திரைப்படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை பாலிவுட்டில் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே சரவணபவன் வழக்கறிஞரிடம் இருந்து எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. சரவணபவன் நிறுவனர் ராஜகோபால் குறித்து ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுடன் அவதூறு பரப்பும் வகையில் திரைப்படம் எடுத்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து இயக்குனர் ஞானவேலின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

More News

பிரபல நடிகர்கள் ஜெயிலுக்கு போன உண்மைக்கதை: வெப் தொடரில் இணையும் அஜித்-விஜய் இயக்குனர்!

பழம் பெரும் நடிகர்கள் கொலை வழக்கில் சிக்கி ஜெயிலுக்கு போன உண்மை கதை வெப்தொடராக வரவிருக்கும் நிலையில், இந்த தொடரில் அஜித் விஜய் பட இயக்குனர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6  ஆண்டுகளுக்கு முந்தைய கெட்டப்பிற்கு மாறிய கார்த்தி: ரசிகர்கள் ஆச்சரியம்!

 நடிகர் கார்த்தி திடீரென 6 ஆண்டுகளுக்கு முந்தைய கெட்டப்புக்கு மாறிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

ரஜினி-நெல்சனின் 'ஜெயிலர்' படத்தில் இந்த பிரபலங்களா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படம் 'ஜெய்லர்'. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின்

20 வருஷத்துக்கு முன் எழுதிய லட்டரை சீதாகிட்ட சேர்ப்பது எப்படி? 'சீதாராமன்' டிரைலர்!

துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகிய 'சீதாராமன்' என்ற வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி வைரலாகி வருகிறது

வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் ரஜினி மகள்? வைரல் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு உடற்பயிற்சி பிரியை என்பதும் அவர் அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம்,