close
Choose your channels

'தளபதி 68' படத்தில் இணைகிறாரா இந்த இளம் நடிகை?

Tuesday, December 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’தளபதி 68’ திரைப்படத்தில் ஏற்கனவே சினேகா, லைலா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகிய மூன்று நாயகிகள் நடித்துவரும் நிலையில் தற்போது மேலும் ஒரு இளம் நடிகை இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 68’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் ஹைதராபாத் படப்பிடிப்பை அடுத்து வெளிநாட்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது என்பது தெரிந்ததே. இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி இந்த படத்தில் மாளவிகா சர்மா இணைந்துள்ளதாக தெரிகிறது. தமிழில் ’காபி வித் காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்த மாளவிகா சர்மா தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாளவிகா சர்மா இந்த படத்தில் இணைந்துள்ளது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 68’ படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்றும் இந்த படம் விஜய்யின் பிறந்தநாளின் போது திரையரங்கில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos