பிக்பாஸ் ஆரியின் மாஸ் அறிவிப்பு: ஆர்மியினர் உற்சாகம்!

  • IndiaGlitz, [Wednesday,March 24 2021]

கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வெற்றியாளர் ஆரி என்பது தெரிந்ததே. இவர் ஏற்கனவே மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் இன்னொரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரி நடித்துவரும் ’அலேகா’, ’பகவான்’ மற்றும் ’எல்லாமே மேல இருக்குறவன் பாத்துக்குவான்’ ஆகிய மூன்று படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதும் இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் உதவியாளர் ஹரிஹரன் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்க ஆரி ஒப்பந்தமானார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விரைவில் ஒரு மாஸ் அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஆரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அனேகமாக இந்த அறிவிப்பு ஆரி நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து ஆரியின் மாஸ் அறிவிப்புக்காக நாங்கள் காத்திருக்கின்றோம் என்று அவரது ஆர்மியினர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். ஆரியின் இந்த இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

நாயகியாகிறார் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய வெற்றி படங்களில் ஒன்று 'துப்பாக்கி'. கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது 

சிவகார்த்திகேயன் படத்தை இயக்க போகிறேனா? கே.வி.ஆனந்த் விளக்கம்!

கோ, அயன் உள்பட ஒருசில சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த், தற்போது அடுத்த படத்திற்காக தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்தது.

'அண்ணாத்த' ரஜினியை சந்தித்த லெஜண்ட் சரவணன்! வைரல் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நடிகை குஷ்பு!

பாஜக வேட்பாளராக ஆயிரம் விளக்கு தொகுதியில் களம் காணும் நடிகை குஷ்பு தற்போது தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட...! கலாய்த்து தள்ளிய விந்தியா...! அதிரும் மதுரை...!

"ராகுலுக்கு பிரதமர் கனவு, உதயநிதிக்கு முதல்வர் கனவு"- இதற்கு இவங்க சரிப்பட்டு வரமாட்டாங்க என அதிமுக நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா பிரச்சாரத்தில்  கூறியுள்ளார்.