திருமண நாளில் மனைவி அனுப்பிய பால்கொழுக்கட்டை: பிக்பாஸ் போட்டியாளர் நெகிழ்ச்சி!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவராகிய ஆரி நேர்மையுடன் விளையாடி வருவதாகவும் அவர் இறுதி வரை செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் பார்வையாளர்கள் மத்தியில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று ஆரியின் திருமண நாளை முன்னிட்டு அவருடைய மனைவி நதியா, பிக்பாஸ் டிவியில் தோன்றி பேசினார். அப்போது தனது கணவருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறிய ஆரியின் மனைவி நதியா, ஏற்கனவே நாம் ஒருமுறை திருமண நாளில் பிரிந்து இருக்கின்றோம் என்றும் இது இரண்டாவது முறை என்றும் உங்களை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன் என்றும் கூறினார்.

மேலும் பால் கொழுக்கட்டை செய்து அனுப்பியுள்ளேன் என்றும் நீங்களும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் கொடுங்கள் என்று கூறினார். மேலும் பிக்பாஸ் வீட்டில் நீங்கள் நன்றாக விளையாடுகிறீர்கள் என்றும், நம் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கின்றார்கள் என்றும் வாழ்த்துக்கள் என்றும் கூறினார்.

அதேபோல் ஆரியின் மகளும் அந்த வீடியோவில் தோன்றி ஆரிக்கு மழலை மொழியில் வாழ்த்து கூறினார். ஆரியின் மனைவி நதியா, இலங்கையை சேர்ந்த ஈழத்தமிழ் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா, எபோலாவைவிட கொடிய வைரஸால் புது ஆபத்து??? பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்!!!

கொரோனா, எபோலாவைவிட புது கொடிய வைரஸின் பாதிப்புகளைப் பற்றி சமீபத்தில் அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

கொஞ்சமாவது மூளையை யூஸ் பண்ணுங்க: நெட்டிசனுக்கு சாட்டையடி பதில் கொடுத்த குஷ்பு!

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு சென்ற கார் நேற்று விபத்துக்கு உள்ளான நிலையில் இந்த விபத்து குறித்து கேலி செய்து டுவீட் ஒன்றை பதிவு செய்த நெட்டிசனுக்கு 'கொஞ்சமாவது

லாஸ்லியா தந்தை மரணம் எப்படி நேர்ந்தது? கனடா அரசின் பிரேத பரிசோதனை சான்றிதழ்!

பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற இலங்கை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் அவர்கள் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடாவில் மரணம் அடைந்தார்.

தனுஷ் படத்தில் வாய்ப்பு கிடைக்க கொரோனா தான் காரணம்: மாளவிகா மோகனன்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் மாளவிகா மோகனன் என்பது தெரிந்ததே.

இரு பிரிவுகளாக பிரிந்த 'அண்ணாத்த' டீம்: ரிலீஸ் எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வந்த 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது.