அரவிந்தசாமியின் 'நரகாசுரன்' படத்தில் இணைந்த வெற்றி பட நடிகை

  • IndiaGlitz, [Wednesday,August 30 2017]

'துருவங்கள் 16' படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள அடுத்த படமான 'நரகாசுரன்' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 16ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படத்தில் அரவிந்தசாமி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் நாயகியாக ஸ்ரேயா மற்றும் 'மாநகரம்' சந்தீப் கிஷான், இந்திரஜித் உள்பட பலர் நடிக்கவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகை ஆத்மிகா இணைந்துள்ளார். இவர் சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசையை முறுக்கு' படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

'துருவங்கள் 16' படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் சரங் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ரான் எதான் யோஹான் இசையமைக்கின்றார். இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த 'மாயா' படத்திற்கு திகில் இசையை அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித்தின் 'விவேகம்' வசூல் குறித்து ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள செய்தி

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்தின் வசூல் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் பல செய்திகள் அதிகாரபூர்வமற்ற செய்தியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது...

ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆரை யாராலும் கைப்பற்ற முடியாது: விவேக் ஜெயராமன் பதிலடி

சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகளின் கூட்டம் நடந்தபோது நான்கு முக்கிய தீர்மானங்கள் இயற்றப்பட்டது...

ஊரை விட்டு ஓடுறேன்னு சொன்னவர் அரசியல் பேசுவது ஏன்? கமலுக்கு சரத்குமார் கேள்வி

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக பரபரப்பான அரசியல் கருத்துக்களை கூறி வரும் நிலையில் ஜெயலலிதா இருக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு தற்போது மட்டும் அரசியல் பேசுவது ஏன்? என்று நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கேள்வி கேட்டுள்ளார்.

பிக்பாஸ் காஜலை மறந்துவிட்ட 'காலா' டான்ஸ் மாஸ்டர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' படத்தின் டைட்டில் பாடல், மற்றும் கிளைமாக்ஸ் பாடல் ஆகிய இரண்டு பாடல்களுக்கும் ரஜினிக்கு நடனப்பயிற்சி அளித்துள்ளார் நடன இயக்குனர் சாண்டி.

காலையில் எடப்பாடி, மாலையில் ஸ்டாலின்: அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்களின் சந்திப்பு

தமிழக அரசியல் சூழ்நிலை கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு எம்.எல்.ஏக்களும் இன்று ஆட்சியை மாற்றும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளதால் இதுவரை இல்லாத வகையில் எம்.எல்.ஏக்களுக்கு அதிக மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டுள்ளது.