close
Choose your channels

விஜய்க்கு அப்பா சஞ்சய் தத் என்றால் அர்ஜுனுக்கு என்ன கேரக்டர்.. 'லியோ' படத்தின் சுவாரஸ்யமான தகவல்..!

Friday, May 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தில் விஜய்க்கு அப்பாவாக சஞ்சய் தத் நடித்து வருகிறார் என்றும் இருவரும் கேங்ஸ்டர் ஆக நடித்து வருகிறார்கள் என்றும் செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ஆக்சன் கிங் அர்ஜுன் கேரக்டர் குறித்த தகவல் கசிந்து உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தில் விஜய்யின் தந்தையாக நடித்திருப்பதாகவும் அவர் இந்த படத்தில் கேங்க்ஸ்டராக நடித்திருப்பதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ஆக்ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத் அவர்களுக்கு சகோதரராக அதாவது விஜய்க்கு சித்தப்பாவாக நடித்து வருவதாகவும், இருவரும் இந்த படத்தில் அதிரடி கேங்க்ஸ்டர் கேரக்டர்களில் நடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்களின் கேரக்டர்கள் குறித்த தகவல் வெளியாகி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதோடு, இந்த படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment