close
Choose your channels

ஆக்‌ஷன் - ரியாக்சன்.. மைக் மோகனை இந்த ஆங்கிளில் பார்த்ததே இல்லையே.. 'ஹரா' டீசர்.!

Tuesday, April 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடந்த 90 ஆம் ஆண்டுகளில் மைக் பைக் மோகன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட நடிகர் மோகன் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நடிகராக இருந்தார் என்பதும் கமல், ரஜினி ஆகியோர் உச்சத்தில் இருந்தபோது கூட இவர் தொடர்ச்சியாக சில்வர் ஜூப்ளி படங்களாக கொடுத்து கொண்டு இருந்தார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளி விட்டு தற்போது ‘ஹரா’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக மோகன் நடித்துள்ள நிலையில் இந்த படத்தை விஜய் ஸ்ரீ இயக்கி உள்ளார். குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு லியாண்டர் லீ மார்டி இசையமைத்துள்ளார்

இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க கோவையில் படமாக்கப்பட்டு உள்ளதாகவும் மோகன் அவர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்றும் நான் தயாரிப்பாளர் மோகன்ராஜ் நம்பிக்கை தெரிவித்தார்

மேலும் நடிகர் சாருஹாசன் 93 வயதில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்றும் அவர் சமுதாயத்திற்கு நல்லது செய்யும் டான் கேரக்டரில் நடித்திருக்கிறார் என்றும் தெரிவித்தார்

இந்த நிலையில் டீசர் வெளியாகி உள்ள நிலையில் அதில் ஆக்சன் ரியாக்சன் என்ற டைட்டிலுடன் இருக்கும் அதிரடி காட்சிகள் பார்ப்பதற்கு அசத்தலாக உள்ளது. மைக் மோகனை இந்த கோணத்தில் நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை என்று ரசிகர்கள் இந்த டீசர் வீடியோவுக்கு கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment