close
Choose your channels

'விக்ரம்' படத்தில் இணைந்த கமல்ஹாசனின் விருப்பத்துக்குரிய நடிகர்!

Friday, January 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அவ்வப்போது புதுப்புது நடிகர்கள் இணைந்து வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது கமல்ஹாசனின் விருப்பத்துக்குரிய நடிகர் மற்றும் இயக்குனர் ஒருவர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, மகேஸ்வரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் ’விக்ரம்’ படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகர் மற்றும் இயக்குனரான சந்தானபாரதி இணைந்துள்ளார். கமல்ஹாசனின் பல படங்களில் சந்தானபாரதி நடித்துள்ளார் என்பதும் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் விருப்பத்துக்குரிய நடிகர்களில் இவரும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் பணிபுரிந்து வருகிறார் என்பதும் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படம் அடுத்த வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.