close
Choose your channels

அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம்.. இயக்குனர் இந்த பிரபலமா?

Friday, August 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ ’மாஸ்டர்’ மற்றும் ’விக்ரம்’ ஆகிய மூன்று படங்களிலும் வில்லன் தோற்றத்தில் நடித்திருந்த நடிகர் அர்ஜுன் தாஸ் சமீபத்தில் வெளியான ‘அநீதி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பதும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே.

இந்நிலையில் தெலுங்கில் அவர் தற்போது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் ஒரு தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் சாந்தகுமார் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இயக்குனர் சாந்தகுமார் ஏற்கனவே ’மௌனகுரு’ ’மகாமுனி’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாந்தகுமார் மற்றும் அர்ஜுன் தாஸ் இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் சில தகவல்கள் நாளைய பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்து வருவதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment