சைக்கிளிங்கில் 400 கி.மீ? ரவுண்டு கட்டி கலக்கும் முன்னணி நடிகரின் வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Wednesday,January 27 2021]

கொரோனா காலத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் தீவிர உடற்பயிற்சியில் இறங்கி விட்டனர். இதனால் ஜிம்மில் இருப்பது போன்ற புகைப்படங்களும் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் நடிகர் ஆர்யா 400 கி.மீ சைக்கிளிங் சேலஞ்சை வெற்றிகரமாக முடித்து உள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு உள்ள ஆர்யாவிற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பாட்டா படத்தை முடித்து விட்டு அடுத்தப் படத்திற்கு தயாராகி வரும் நடிகர் ஆர்யா கொரோனா காலத்தில் முழுநேரமும் உடற்பயிற்சி மற்றும் சைக்கிளிங்கில் ஈடுபட்டு வந்தார். சென்னை கடற்கரை சாலையில் சைக்கிளிங் செய்த அவர் முதற்கட்டமாக 100 கி.மீ சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது. தற்போது 400கி.மீ சேலஞ்சை அவர் வெற்றிகரமாக முடித்து இருக்கிறார். இதனால் சைக்கிளிங் மற்றும் உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட பலரும் நடிகர் ஆர்யாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இவரது சாதனைக்கு நடிகர் விவேக் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அதில், “டியர் ஆர்யா உங்களுடைய 400 கி.மீ சைக்கிளிங் பயணத்திற்கு வாழ்த்துகள். உடல்நலனில் கவனம் செலுத்தும் இளைஞர்களுக்கு முன் மாதிரியாக இருக்கிறீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு உங்களுடைய பயணம் மிகப்பெரிய உந்துதலாக அமையும்” என்று புகழ்ந்துள்ளார். இந்த பதிவிற்கு பதில் அளித்த ஆர்யா “என்றென்றும் மாறாத உங்களது அன்புக்கு நன்றி சார்… உங்களுடைய ஊக்கம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

More News

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐஐடி பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை- மாணவி குற்றச்சாட்டு!

சென்னை ஐஐடியில் பயின்று வரும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் தன்னிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர் மீது நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

பிரபல நடிகையின் குட்டிப்பாப்பா பிறந்த நாளுக்கு மகளுடன் சென்ற நடிகை மீனா!

கேஆர் விஜயாவுக்குப் பிறகு 'புன்னகை அரசி' என்ற பட்டத்தை பெற்ற நடிகை சினேகா மகளான குட்டிப்பாப்பாவுக்கு முதல் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

தமிழக முதல்வரை சந்தித்த நடிகர் விவேக்: நற்செய்தி வரலாம் என டுவீட்!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் அரசியல்வாதிகளை சந்தித்து அரசியல் கட்சியில் இணைந்து வருகின்றனர் என்பது குறித்த செய்திகளை அவ்வப்போது

சரண்யா பொன்வண்ணன் மகள் நிச்சயதார்த்தம்: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகை சரண்யா பொன்வண்ணன் என்பதும் இவர் இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே.

டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் ஏற்றிய கொடி: பதட்டம் அதிகரிப்பு!

மத்திய அரசு சமீபத்தில் புதிய வேளாண் மசோதாக்களை அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் அரியானா உள்ளிட்ட வடமாநில விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்