24 வயது இளம் காதலியுடன் மொட்டை மாடியில் செம்ம ஆட்டம் போட்ட 54 வயது நடிகர்.. வீடியோ வைரல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


54 வயதான நடிகர் பப்லு தனது 24 வயது காதலியுடன் மொட்டை மாடியில் செம ஆட்டம் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 24 வயது இளம் பெண்ணுடன் லிவிங் டு கெதர் உறவில் இருப்பதாக நடிகர் பப்லு தெரிவித்தார். இது பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் செய்யப்பட்டது.
ஆனால் அந்த விமர்சனத்துக்கு எல்லாம் பேட்டியில் பதிலடி கொடுத்த பப்லு, ‘நான் இளம் பெண்ணை திருமணம் செய்வதால் உங்களுக்கு என்ன பிரச்சனை? எனக்கு ஒரு பெண் துணை வேண்டும் என்பதற்காக நான் அவருடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் 54 வயதிலும் அவர் சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சமூக வலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளார். அவரது பக்கத்திற்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பப்லு தனது இளம் காதலியுடன் மொட்டை மாடியில் தெலுங்கு பாடல் ஒன்றுக்கு செம டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments