காமெடி நடிகருக்குள் ஒளிந்திருக்கும் அபார திறமை: வைரலாகும் புகைப்படங்கள் 

  • IndiaGlitz, [Saturday,January 02 2021]

தெலுங்கு திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் பிரம்மானந்தம் என்பதும், இவர் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் இவரது காமெடிகள் ரசிகர்களை மிகச் சிறந்த அளவில் ரசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் என்பதும் தெரிந்ததே.

தெலுங்கு திரையுலகை பொருத்தவரை பிரம்மானந்தம் நடிக்காத படமே மிகவும் குறைவு என்ற அளவிற்கு ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் பிரம்மானந்தம் அவர்களை அனைவரும் ஒரு காமெடி நடிகராக தான் இதுவரை பார்த்திருக்கிறோம், ஆனால் அவருக்குள் ஒளிந்திருக்கும் அபார திறமை ஒன்று தற்போது புகைப்படங்களாக வெளிவந்து வைரல் ஆகி வருகின்றன.

நடிகர் பிரம்மானந்தம் அவர்கள் பென்சிலால் ஓவியம் வரைவதில் திறமையானவர் என்று அவர் வரைந்த ஓவியங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருவதில் இருந்து தெரிய வந்துள்ளது. குறிப்பாக அவர் வரைந்த வெங்கடாஜலபதி ஓவியம் அச்சுஅசலாக வெங்கடாஜலபதியை நேரில் பார்த்த மாதிரி இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். அதேபோல் அவர் வரைந்த அனுமார் ஓவியம் ஒன்றும் உள்ளத்தைக் கவரும் வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காமெடி நடிகரின் உள்ளே இவ்வளவு பெரிய திறமை ஒளிந்திருக்கிறதா? என்று ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் எதற்காக என்னை சந்தித்தார்? முதல்வர் பழனிசாமி வெளியிட்ட ரகசியம்!

தளபதி விஜய்யை சந்திப்பின்போது அவரது கோரிக்கை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியது தற்போது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது இந்த இளம் இயக்குனரா? 

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்பட பலர் தற்போது இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து ஆரம்பித்துவிட்டனர் என்பதை பார்த்து வருகிறோம்

பிக்பாஸ் டைட்டில் வின்னர்: ஆரிக்கும் பாலாஜிக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஆரிக்கு ஆரம்பம் முதலே மிகப்பெரிய ஆதரவு இருந்து வருகிறது என்பதும் சமூக வலைதளங்களில் அவரது பெயர் தினமும் ட்ரெண்டாகி வருகிறது என்பதும் தெரிந்ததே

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் காலமானார்: திரையுலகினர் அஞ்சலி

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான KB films பாலு அவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி

இந்தியாவிற்கும் வந்துவிட்ட மர்மத்தூண்? தொடரும் பீதி…

உலகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக, ஆள்நடமாட்டமே இல்லாத இடங்களில் திடீரென உலோகத்தூண் தோன்றுவதும் பின்னர் அது காணாமல் போவதும் கடும் பீதியை ஏற்படுத்தி வருகிறது.