ரியல் தீரன் குடும்பத்தினர்களுக்கு ரீல் தீரன் ஆறுதல்

  • IndiaGlitz, [Friday,December 15 2017]

சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த கும்பலை பிடிக்க ராஜஸ்தான் சென்ற தனிப்படையில் இருந்த பெரியபாண்டியன் சமீபத்தில் ராஜஸ்தான் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். பெரிய பாண்டியனின் வீரமரணத்திற்கு தமிழக தலைவர்கள், அரசியல்வாதிகள், காவல்துறை உயரதிகாரிகள் உள்பட அனைவரும் நேற்று அஞ்சலி செய்தனர்.

இந்த நிலையில் பெரியபாண்டியனின் உடல் நெல்லை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான மூவிருந்தாளி சாலைப்புதூர் கிராமத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு வீரமரணம் அடைந்த பெரியபாண்டியனுக்கு இறுதியஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் பெரியபாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடிகர் கார்த்தியும் அவரது சொந்த ஊருக்கு சென்றிருந்தார். பின்னர் பெரியபாண்டியனின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். சமீபத்தில் வெளிவந்த கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படமும் வடமாநில கொள்ளையர்களை பிடிக்கும் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பொங்கல் விருந்தாக வெளிவருமா சீயான் விக்ரமின் 'ஸ்கெட்ச்'?

விக்ரம் நடிப்பில் விஜய்சந்தர் இயக்கி வந்த 'ஸ்கெட்ச்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

அரசியலில் கமல் இன்னொரு சிவாஜியாக மாறக்கூடும்: தமிழருவி மணியன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிசம்பர் 26 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திப்பது உறுதியாகியுள்ளது. இந்த ஆறுநாட்களிலும் தகுந்த பாதுகாப்பு தேவை

ரஜினியின் 2ஆம் கட்ட ரசிகர்கள் சந்திப்பு தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை முதல்கட்டமாக கடந்த மே மாதம் சந்தித்தார். அப்போது அரசியல் வருகை குறித்து 'போர் வரும்போது பார்த்து கொள்ளலாம்' என்றும் தெரிவித்தார்.

மற்ற ஹீரோக்களில் இருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுவது எதில்? நடிகர் சார்லி

நடிகர் சார்லி கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணசித்திர கேரக்டர்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்பது தெரிந்ததே.

மெர்சல் தயாரிப்பாளருக்காக தனுஷ் எடுக்கும் 2வது முயற்சி

தளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், அடுத்ததாக தனுஷுடன் கைகோர்க்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை கடந்த மாதம் பார்த்தோம்