close
Choose your channels

பொங்கல் விருந்தாக வெளிவருமா சீயான் விக்ரமின் 'ஸ்கெட்ச்'?

Friday, December 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடிப்பில் விஜய்சந்தர் இயக்கி வந்த 'ஸ்கெட்ச்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்களால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஸ்கெட்ச்' திரைப்படம் வரும் ஜனவரியில் விக்ரம் ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவரவுள்ளது என்பது தாணு அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த படம் பொங்கல் விருந்தாக வருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

விக்ரமுடன் முதல்முறையாக தமன்னா ஜோடி சேர்ந்திருக்கும் இந்த படத்தில் ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பிய நிலையில் வெகுவிரைவில் டிரைலர் மற்றும் இசை வெளியீடு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.