இதோடு நிறுத்தி கொள்ளுங்கள்: ரஞ்சித்துக்கு கருணாஸ் எச்சரிக்கை

  • IndiaGlitz, [Wednesday,June 12 2019]

இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 'சோழ மன்னன் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை தெரிவித்தார். இந்த கருத்துக்கு பெரும்பாலானோர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஒருசிலர் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். ரஞ்சித்தின் சர்ச்சை பேச்சு குறித்து தஞ்சை மற்றும் மயிலாடுதுறை காவல்நிலையங்களில் அவருக்கு எதிராக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகரும் திருபுவனம் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவுமான கருணாஸ், ரஞ்சித்தை எச்சரித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘எங்கள் நிலங்களை பறித்தார்! பார்ப்பனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்! பெண்களை வேசியாக்கினார்! இப்படி வரலாறு தெரியாத கட்டுக்கதைகளெல்லாம் உங்கள் தேவைகளுக்கு ஓர் மாபெறும் இன வரலாற்றை கொச்சைப்படுத்தாதீர்கள்!

உங்களை போல் முன்னோரின் வரலாற்றை கற்காமல் கதைவிடாதீர்கள். இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! தமிழ்ப் பேரரசன் இராசராசச்சோழன் என்பவன் இந்தப் பூமிப்பந்தின் மனித அதிசயம்! தமிழர் மரபின் உச்சம்! நீங்களும் இந்த தமிழர் இனத்தில் பிறந்தவன் என்று பெருமைபட்டுக் கொள்ளுங்கள்! அதைவிடுத்து பார்ப்பனர்களின் பங்காளியை போல் எதிர்வரிசையில் நின்று கொக்கரிக்காதீர்! தமிழர் முன்னோர்களின் வரலாறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்! பிழையானவற்றை பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்! இது அறிவுரை கலந்த எச்சரிக்கை.

இவ்வாறு கருணாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

யாருக்கு என்ன உறவுன்னு தெரியாம பேசக்கூடாது: நயன்தாரா சர்ச்சை குறித்து ராதாரவி

நடிகர் ராதாரவி கடந்த சில வாரங்களுக்க்கு முன் நயன்தாரா நடித்த 'கொலையுதிர் காலம்' திரைப்படத்தின் விழா ஒன்றில், நயன்தாரா குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியதாக திமுகவில்

லட்சுமி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

குணசித்திர நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணன் ஏற்கனவே 'ஆரோகணம்', 'நெருங்கி வா முத்தமிடாதே', 'அம்மணி' ஆகிய படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது அவர் இயக்கி முடித்திருக்கும் திரைப்படம் 'ஹவுஸ் ஓனர்'.

டிக்டாக்கில் விஷம் குடித்த வீடியோவை வெளியிட்டு பெண் தற்கொலை!

டிக்டாக் செயலியில் விஷம் குடிப்பது போன்ற வீடியோவை வெளியிட்ட அரியலூர் பகுதியை சேர்ந்த 24 வயது பெண் பரிதாபமாக பலியானார்

நடிகர் சங்க தேர்தல்: விஜய்சேதுபதி ஆதரவு யாருக்கு?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் விஷால் அணி, பாக்யராஜ் அணி ஆகிய இரு அணிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் நடிகர்,

ஆன்லைனில் பிச்சை எடுத்து 17 நாட்களில் லட்சாதிபதியாகிய பெண் கைது!

இன்றைய தலைமுறையினர்களுக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் இண்டர்நெட். இந்த இண்டர்நெட் மூலம் பள்ளி மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் மூலம் பெரும்பயன் பெற்று வருகின்றனர்.