நடிகர் மாதவனின் குடும்பத்திற்கே கொரோனா: டுவிட்டரில் தகவல்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கும், தமிழகத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ் திரை உலகில் உள்ள பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பாக விஷால், சரத்குமார், தமன்னா உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின்னர் குணமானார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் மாதவன் தனது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தனது டுவிட்டரில் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள டுவிட் ஒன்றில், தனது குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறியுள்ளார். நடிகர் மாதவனின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பாதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

4 வாரம் பெட்-ரெஸ்ட்டுக்கு பின் மணிமேகலையின் சாலையோர டான்ஸ்: வீடியோ வைரல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்வித் கோமாளி நிகழ்ச்சி வேற லெவல் பிரபலமாகி விட்டது என்பதும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கோமாளிகள் அவர்களே

அருண்விஜய்யை அடுத்து மேலும் ஒரு பிரபல நடிகரின் படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் 'குக்-கள் மற்றும் கோமாளிகள்

'மாநாடு' படப்பிடிப்பில் கட்டாந்தரையில் படுத்து தூங்கிய சிம்பு: வைரல் புகைப்படங்கள்

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாநாடு'. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது

தேர்தலில் உதயநிதி போட்டியிடக்கூடாது...! புகார் அளித்த பாஜக...!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை வேட்பாளர் பட்டியலில் இருந்து தகுதி நீக்கம் செய்யம் வேண்டும் என்று, பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பிரச்சாரம் செய்ய ஆளில்லாமல் தவித்த வேட்பாளர்...!கைகொடுத்தது நம்ம சித்தி தான்....!

விருதுநகர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம்- சமக சார்பாக களமிறங்கும் வேட்பாளர் பிரச்சாரம் செய்ய ஆளில்லாமல் தவித்து வருகிறாராம்.