close
Choose your channels

அருண்விஜய்யை அடுத்து மேலும் ஒரு பிரபல நடிகரின் படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ்

Saturday, April 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் ’குக்-கள் மற்றும் கோமாளிகள் வேற லெவலில் காமெடி செய்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக வரும் புகழ் செய்யும் நகைச்சுவைக்கு அளவே இல்லை என்று சொல்லலாம். தர்ஷா மற்றும் பவித்ராவிடம் ரொமான்ஸ், பாசமலர் ஷிவாங்கியுடன் செய்யும் காமெடி உள்பட புகழின் ஒவ்வொரு காமெடியையும் ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் இணைந்த புகழ், தற்போது மேலும் ஒரு பிரபல நடிகரின் படத்தில் இணைந்துள்ளார். சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் 'மாநாடு’ படத்தில்தான் புகழ் இணைந்து உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் அவர் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிம்புவுடன் புகழ் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த புகைப்படத்துக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புகழ் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக மாறி விடுவார் என்று நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.