விமானத்தில் பயணம் செய்த ஒரே ஒரு பயணி, அதுவும் நம்ம தமிழ் நடிகர்: வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Wednesday,August 11 2021]

நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்யும் விமானத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் பயணம் செய்ததாகவும், அந்த ஒரே பயணி நமது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பு காரணமாக விமானங்கள் குறைவாக இயங்கினாலும் பல விமானங்களில் பயணிகள் குறைவாகவே பயணம் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன் விமானத்தில் பயணம் செய்துபோது, தான் ஒருவர் மட்டுமே அந்த விமானத்தில் பயணம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 26ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த போது தான் ஒருவர் மட்டுமே அந்த விமானத்தில் பயணம் செய்வதை பார்த்து ஆச்சரியமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விமானம் முழுவதையும் அவர் வீடியோ எடுத்து காலியாக உள்ள விமானத்தை அவர் அந்த பதிவில் வீடியோவாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

நடிகர் மாதவன் தற்போது ‘ராக்கெட்டரி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்தப் படம் திரையரங்குகள் திறந்தவுடன் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தற்போது ஹிந்தியில் ’அம்ரித்தி பண்டிட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் துபாய் சென்ற போது தான் தனியாக விமானத்தில் பயணம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

படத்துல இதெல்லாம் பார்க்க முடியாது: நயன்தாராவின் வைரல் வீடியோ

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'நெற்றிக்கண்' திரைப்படம் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது தெரிந்ததே.

'பீஸ்ட்' படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஒரே இரவில் 500கிமீ பயணம் செய்த பிரபல நடிகர்!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஒரே இரவில் 500 கிலோ மீட்டர் பயணம் செய்த பிரபல நடிகர் ஒருவரின் தகவல் தற்போது வெளிவந்துள்ளது 

ஆரம்பமாகிறது சிம்புவின் 'பத்து தல' படப்ப்பிடிப்பு !

சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி முடித்துள்ள 'மாநாடு' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வெறும் 11 நிமிடமே வன்புணர்வு செய்தார்… தண்டனையை பாதியாகக் குறைத்த சர்ச்சை தீர்ப்பு!

சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் வன்புணர்வு குற்றத்தின் மீதான விசாரணை ஒன்றில், குற்றவாளி வெறும் 11 நிமிடமே பாலியல் வன்கொடுமை செய்தார்.

கோல்டன் பாய் நீரஜ்க்கு சல்யூட் வைத்த அமுல்… அசத்தும் டூடுல் புகைப்படம்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட நீரஜ் சோப்ரா இந்தியாவிற்கு தடகளப் பிரிவில் முதல் ஒலிம்பிக் தங்கத்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.