close
Choose your channels

இரு நாட்டு பிரதமர்களுடன் செல்பி எடுத்து கொண்ட நடிகர் மாதவன்.. வைரல் வீடியோ..!

Sunday, July 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற போது பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர்களுடன் நடிகர் மாதவன் செல்பி எடுத்துக் கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஜூலை 14ஆம் தேதி பாரிஸில் இருநாட்டு பிரதமர்கள் மற்றும் அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் நடந்த இரவு உணவு நிகழ்ச்சியில் நடிகர் மாதவனும் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் ஆகியோர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த பதிவில் எனக்காக இந்திய பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் செல்பி எடுக்க ஒப்புக்கொண்டது ஒரு இனிமையான தருணம் என்றும் குறிப்பாக நமது பிரதமர் கருணை மற்றும் இனிமையுடன் எழுந்து நின்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த படம் எனக்கு தனித்துவம் மிக்கது என்றும் என் மனதில் எப்போதும் பதிந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா மற்றும் பிரான்ஸ் என்றென்றும் ஒன்றாக செழிக்கட்டும் என்றும் இரு நாடுகளின் பணிகள் வெற்றிக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment