"துப்பு கெட்ட நிர்வாகம்" சேஷாத்ரி பள்ளி...! சரமாரியாக கிழித்தெடுத்த நடிகர் அசீம்...!

  • IndiaGlitz, [Thursday,May 27 2021]

பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தான் ராஜகோபாலன். அப்பள்ளியில் படித்துவிட்டு, தற்போது மாடலிங் துறையில் இருக்கும் முன்னாள் மாணவி ஒருவர் தான் ராஜகோபாலன் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து, புகார் கொடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இப்பிரச்சனை வெடிக்க, திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்தநிலையில் ராஜகோபாலன் மற்றும் சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் குறித்து நடிகர் அசீம் சரமாரியான கேள்விகளை முன்வைத்துள்ளார். அவர் பேசியிருப்பதாவது,

இப்பிரச்சனை ஆசிரியர் ராஜகோபாலனை மட்டும் சார்ந்ததல்ல, ஒட்டுமொத்த பள்ளி நிர்வாகத்தினருக்கும் தெரிந்தது தான். பள்ளியில் இத்தனை வருடங்களாக ஒரு ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில வருடங்களாகவே மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் சேஷாத்ரி நிர்வாகம் முட்டையை அடை காக்கும் கோழியைப் போல, ராஜகோபாலனை காப்பாற்றி வருகிறது. அங்கு இருப்பவர்களுக்கு இந்த ஆசிரியரின் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் தெரிந்திருந்தும், கண்டும் காணாமலும், எந்த நடவடிக்கையும் எடுக்காமலும் இருந்துள்ளனர். மாணவிகள் புகார் கொடுத்தவுடன் ராஜகோபாலனை பணிநீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் துப்பு கெட்ட நிர்வாகம், தன் சமூகத்தை சேர்ந்த ஆசிரியர் என்பதால் அவனை காப்பாற்ற நினைக்கிறது. இந்த நிலையில் அரசு எடுத்திருப்பது சரியான முடிவே, அரசிற்கு பிக் சல்யூட் என்கிறார்.

ஆசிரியர் என்னும் உயர்ந்த பணியில் இருப்பவர்கள் இந்தமாதிரி கேவலமான செயல்களில் ஈடுபட்டு, ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்தையும் கொச்சைபடுத்துகிறார்கள். ராஜகோபாலன் அங்குள்ள குழந்தைகளை மகள்களாக பார்த்திருந்தால், இந்த பிரச்சனையே ஏற்பட்டு இருக்காது. இவனுக்கு ஏற்பட்ட இச்சையால் மாணவிகளை துன்புறுத்தியுள்ளான். சேஷாத்ரி பள்ளி பிராமணர் கோட்பாடுகளை உடைய பள்ளி. கிறிஸ்துவர், இஸ்லாமியர்கள் மற்றும் கீழ்சாதி மக்களுக்கு இங்கு சீட் கிடைக்காது என்பது பெரும்பான்மையான மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது, அது நிதிர்சனமான உண்மையாகவும் இருந்து வருகிறது. ஆனால் இது பற்றி பேச தகுதியில்லாத காயத்ரி ரகுராம், அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் பார்ப்பன எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு என மதவாதங்களை உள்ளிழுத்து சம்மந்தமில்லாமல் பேசி வருகின்றனர். மத்திய அரசு நம் கையில் உள்ளது, நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று மதபெருமையை தூக்கி பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தப்பு பண்ணவங்களுக்கு சாதி, மதம் எல்லாம் முக்கியமில்லை. யார் செய்தாலும், தவறு தவறு தான். ராஜகோபாலனுக்கு கொடுக்கும் கடுமையான தண்டனை மூலமாகத்தான், இதுபோன்ற வக்கிரபுத்தி உள்ளவர்கள் திருந்துவார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதற்கு தக்க நடவடிக்கை எடுப்பார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என பேசி முடித்தார் அசீம்.
 

More News

இறுக்கி அணைச்சு ஒரு உம்மா: ஜூவாலா கட்டாவின் வைரல் புகைப்படம்!

பிரபல தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது என்பது தெரிந்ததே. கொரோனா வைரஸ் பாதிப்பு காலம்

ஏஐசிடிஇ அறிவித்த குட் நியூஸ்....! இன்ஜினியரிங் மாணவர்கள் ஹேப்பி அண்ணாச்சி...!

தாய்மொழி வழியில் பாடம் கற்கும் முறையையே மனதில் எளிதாகவும் பதியும், புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கும் என உலக கல்வியாளர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்

பிளாக்பஸ்டர் வரவேற்பு பெற்ற 'நவம்பர் ஸ்டோரி': நன்றி தெரிவித்த தமன்னா

பிரபல நடிகை தமன்னா நடிப்பில் ஹாட்ஸ்டாரில் சமீபத்தில் வெளியான வெப்தொடர் 'நவம்பர் ஸ்டோரி'. இந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மது- அளவா குடிச்சா மருந்துக்குச் சமமா? ஆய்வு என்ன சொல்கிறது?

மது குடிக்கும் எங்களுக்கு எப்படி கொரோனா வரும்? எனச் சில குடிமகன்கள் கொரோனா ஊரடங்கின்போது

தனுஷூம் பாபா பாஸ்கரும் ஒண்ணா படிச்சாங்களா? ரசிகர்களின் சந்தேகத்தை தீர்க்கும் தனுஷ் வீடியோ!

'குக் வித் கோமாளி நிகழ்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் மாஸ்டர் பாபா பாஸ்கர் என்பதும் இவர் அந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை தாக்குப்பிடித்து ரசிகர்களின் மனதை வென்றார்