close
Choose your channels

விஜயகாந்த் நினைவிடத்தில் மோகன்.. இருவரும் இணைந்து எத்தனை படத்தில் நடித்திருக்கிறார்கள்?

Wednesday, February 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமான நிலையில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தினந்தோறும் ஏராளமான ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் பல முன்னணி நடிகர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் நடிகர் மோகன் இன்று அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் மனைவி மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா இந்த நிகழ்வின் போது உடன் இருந்தார்.

விஜயகாந்த் மற்றும் மோகன் ஆகிய இருவரும் 1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்தனர் என்பதும் இருவரும் இணைந்து சில படங்கள் நடித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 1984 ஆம் ஆண்டு வெளியான ’நூறாவது நாள்’ என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் நாயகனாகவும் மோகன் வில்லன் ஆகவும் நடித்திருந்தார்கள். இந்த படத்தை மணிவண்ணன் இயக்கியிருந்தார்.

அதேபோல் அதே ஆண்டு வெளியான ’வேங்கையின் மைந்தன்’ என்ற ராமநாராயணன் இயக்கத்தில் உருவான படத்தில் விஜயகாந்த், மோகன் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos