உண்மையில் என்ன நடந்தது: ரம்யாகிருஷ்ணன் - வனிதா மோதல் குறித்து நகுல்!

  • IndiaGlitz, [Sunday,August 01 2021]

பிக்பாஸ் ஜோடி இந்நிகழ்ச்சியில் வனிதா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவர் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உண்மையில் அன்றைய நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பது குறித்து நடுவர்களில் ஒருவரான நகுல் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அன்றைய நிகழ்ச்சியின் போது வனிதா இன்னும் நன்றாக ஆடி இருக்கலாம் என்று நடுவர்களாகிய நாங்கள் இருவருமே கூறினோம் என்றும், ஆனால் வனிதா தான் வேறு விதமாகப் பேசினார் என்றும் தெரிவித்தார். நான்கு நிமிடங்களில் அவர் இரண்டு நிமிடம் உட்கார்ந்து கொண்டே இருந்ததால் அவர் எழுந்து ஆட தொடங்கும்போது அதிக எனர்ஜியுடன் ஆடுவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம் என்றும், ஆனால் அவருடைய அம்மன் நடனத்தில் எங்களுக்கு திருப்தி இல்லை என்று அதனால் இன்னும் நன்றாக நாடி இருக்கலாம் என்று நாங்கள் சொன்னோம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளருடன் இன்னொரு போட்டியாளரை எப்படி ஒப்பிடாமல் தீர்ப்பு சொல்ல முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் நிகழ்ச்சி முடிந்து நான் வீட்டுக்கு போனபிறகு வனிதா அசிங்கமாக பேசியதாக டீமில் உள்ளவர்கள் சொன்னார்கள் என்றும் என்னை கூட விடுங்கள், ஆனால் ரம்யா கிருஷ்ணனிடம் வனிதா கண்டிப்பாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நகுலின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ரஜினியை அடுத்து களத்தில் இறங்கிய மீனா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் 'அண்ணாத்த'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது

'நெற்றிக்கண்' இயக்குனரின் அடுத்த படத்தில் சமீபத்தில் ஹிட் கொடுத்த ஹீரோ!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'நெற்றிக்கண்' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது என்பதும் டிரைலருக்கு பின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட்

ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரணுடன் அனிருத்: 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் 'நட்பு' பாடல் ரிலீஸ்

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் இந்த படத்தின் பாடல் ஆகஸ்டு 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக

'பூக்களும் நெருப்பும்': உச்சபட்ச கிளாமரில் பூஜா ஹெக்டே!

மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே, அதன்பின் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையானார் என்பதும் மீண்டும் தற்போது

யாஷிகாவை நான் விபத்தில் மாட்டிவிட்டேனே? உண்மையை உடைத்த பிக்பாஸ் பாலாஜி!

சமீபத்தில் பிக்பாஸ் நடிகை யாஷிகா மகாபலிபுரத்தில் இருந்து சென்னை வந்து கொண்டிருக்கும் போது கார் விபத்தில் சிக்கினார் என்றும் அந்த விபத்தில் அவரது நெருங்கிய தோழி மரணம் அடைந்தார்