மிரட்டியதும் மிரண்டு போனதும் ஒரே ஜோடி கண்களா? நடிகைக்கு நாசர் எழுதிய கடிதம்!

மிரட்டியதும், மிரண்டுபோனது ஒரே ஜோடி கண்களா? என ஆச்சரியத்துடன் நடிகர் நாசர் பழம்பெரும் நடிகைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி அவர்களுக்கு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன்னாள் நடிகர் சங்கத் தலைவரும் பிரபல நடிகருமான நாசர், சவுகார்ஜானகிக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

‘ ஓ எங்கள் சவுக்கார் அம்மா!
அத்தனை மொழிகளில் எத்தனை நூறு
படங்கள்
ஒவ்வொன்றும் முத்தாய்!
ஒன்றில் கண்டது இன்னொன்றில்
இல்லை!
புதிது புதிதாய் கண்டு ரசிக்க கண்கோடி!
யாருக்கும் அமைந்ததில்லை உங்கள்
கண்கள்!
புதிய பறவையில் மிரட்டியதும்
மிரண்டு போனதும் ஒரு ஜோடி கண்களா?
கண்களை மிஞ்சும் உங்கள் முத்து சிரிப்பு
அச்சிரிப்பினும் வழிந்தோடும் உண்மையான
அன்பும் பாசமும்
தாங்கள் எங்களுக்கு தந்த
கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும்
முத்து முத்தாய் கோர்த்து அழகு பார்த்து
மனம் மகிழ்ந்து விம்மிய எங்களுக்கு
அம்முத்துமாலைக்கு பதக்கமாய்
இன்று பத்மஸ்ரீ உங்களுக்கு உவகை
எங்களுக்கு பெருமை

குறிப்பாக நாசர் இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மிரண்டுபோனதும் மிரட்டியதும் ஒரே ஜோடி கண்கள் என தெரிவித்துள்ளார். சிவாஜிகணேசன் சரோஜாதேவி நடித்த ’புதிய பறவை’ படத்தில் இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் சவுகார்ஜானகி நடித்திருப்பார் என்பதும் அதில் அப்பாவியாய் மிரண்டு போகும் ஒரு கேரக்டர், அதிரடியாக சிவாஜியையே மிரட்டும் ஒரு கேரக்டர் என நடித்திருந்த சவுகார் ஜானகி, அந்த படத்தில் அவரது கண்கள் தான் அதிகம் நடித்திருக்கும் என்பது படம் பார்த்தவர்களுக்கு தெரியும். இதை சுட்டிக் காட்டியே மிரட்டியதும் மிரண்டுபோனதும் ஒரு ஜோடி கண்களா? என நாசர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

More News

ஒரே நேரத்தில் அஜித், விஜய்யுடன் நடிக்கும் பிரபல நடிகர்!

அஜித் மற்றும் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படங்களில் ஒரே நேரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

கடலில் ஒய்யாரமாக மிதக்கும் மாளவிகா மோகனன்: வைரல் புகைப்படம்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்

அடுத்த நான்கு படங்களின் இயக்குனர்களை உறுதி செய்த சூர்யா!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' மற்றும் 'ஜெய்பீம்' ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் நடித்து முடித்துள்ள

சிம்புவுடன் ஜோடி சேரும் 'பாக்சிங்' வீராங்கனை?

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'மஹா' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அது மட்டுமின்றி கௌதம் மேனன்

சிவகார்த்திகேயன் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான 'டான்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.