close
Choose your channels

நடிகர் செந்திலுக்கு பிரபல அரசியல் கட்சியில் புதிய பதவி

Thursday, September 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் செந்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தினகரனின் அமமுகவில் இணைந்த நிலையில் தற்போது அவருக்கு அக்கட்சியில் புதிய பதவி கிடைத்துள்ளது

அமமுக அமைப்பு செயலாளராக நடிகர் செந்தில் உள்பட 5 பேர்களை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் செந்தில், சிவா ராஜமாணிக்கம், டாக்டர் கதிர்காமும், தேவதாஸ், ஹென்றி தாமஸ் ஆகிய ஐவரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர்களாக செயல்படுவார்கள் என்றும், தேர்தல் பிரிவு செயலாளராக மாணிக்கராஜா செயல்படுவார் என்றும், தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

தினகரனின் அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி, தங்கத்தமிழ்ச்செல்வன் உள்பட முக்கிய தலைவர்கள் திமுக, அதிமுகவில் இணைந்து வரும் நிலையில், தற்போது கட்சியில் இருக்கும் தலைவர்களை காப்பாற்றிக்கொள்ள அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.