இப்போது புரிகிறதா? ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நடிகர் சித்தார்த் டுவிட்!

  • IndiaGlitz, [Monday,July 19 2021]

அரசியல் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட சுமார் 300க்கும் மேற்பட்டவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பதாக இன்று காலை வெளியான செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் ஒலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கு விளக்கம் அளித்த மத்திய அரசு நாங்கள் யாரையும் ஒட்டு கேட்க வில்லை என்றும் கூறியுள்ளது

இந்த இந்த ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர், திருமுருகன் உள்பட பலரது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பதாக வெளி வந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்

ஆரோக்கிய சேது போன்ற நம்பிக்கையற்ற செயலிகளை பயன்படுத்த மத்திய அரசு ஏன் வலியுறுத்தியது என இப்போது புரிகிறதா? என அவர் கேட்டுள்ளார். அவர்கள் எப்போதும் பொய் சொல்வார்கள், எப்போதும் உளவு பார்ப்பார்கள். எனவே ஏன் என கேட்க கற்றுக் கொள்ளுங்கள். அப்படி கேட்டால் தான் அவர்களிடம் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கும்’ என்று கூறியுள்ளார் இந்த டுவிட்டர் போது வைரலாகி வருகிறது.
 

More News

மீண்டும் தாத்தாவாகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் தாத்தாவாக இருப்பதாக வெளிவந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி அவரது குடும்பத்தினரை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கார்த்திக் நரேனின் 'நரகாசுரன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான 'துருவங்கள் பதினாறு' என்ற திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான நிலையில் அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படம் 'நரகாசுரன்'

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன்: சூப்பர் போஸ்டர் ரிலீஸ்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து

நடிகை ரோஜா வகித்துவந்த பதவி அதிரடியாகப் பறிப்பு… என்ன காரணம்?

ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மாநிலத்தின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அருதிபெரும்பான்மையாக

சீனாவில் பரவிய புது வைரஸ்… அதிகப் பாதிப்பு கொண்டது என்பதால் கடும் அதிர்ச்சி!

கடந்த 2019 டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் உலகமே தலைகீழாக மாறியிருக்கிறது.