close
Choose your channels

கார்த்திக் நரேனின் 'நரகாசுரன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Monday, July 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ’துருவங்கள் பதினாறு’ என்ற திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான நிலையில் அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படம் ’நரகாசுரன்’. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ஒரு சில பொருளாதார நெருக்கடி காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது

இதனையடுத்து இயக்குனர் கார்த்திக் நரேன், அருண்விஜய் நடித்த ’மாபியா’ என்ற படத்தை இயக்கினார் என்பதும் இந்த படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது தனுஷ் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார்

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ‘நரகாசுரன்’ திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக செய்திகள் வெளியானது. தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டு ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘நரகாசுரன்’ ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அரவிந்தசாமி, இந்திரஜித், ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷான் ஆத்மிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரான் எதான் யோஹன் இசையமைத்துள்ளார். சுஜித் சரங் ஒளிப்பதிவும், ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படம் வெற்றிப்படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.