குஷி-2, வாலி-2 படங்களின் ஹீரோக்கள் யார். எஸ்.ஜே.சூர்யா

  • IndiaGlitz, [Thursday,March 02 2017]

அஜித் நடித்த 'வாலி' மற்றும் விஜய் நடித்த 'குஷி' என தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களின் வெற்றி படத்தை இயக்கிய பெருமை பெற்றவர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. இந்த படங்களின் வெற்றியை அடுத்து அவர் பல படங்களை இயக்கி தற்போது பிரபல நடிகராக உள்ளார்.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'மகேஷ்பாபு 23' படத்திலும் 'விஜய் 61' படத்திலும் வில்லனாக நடித்து கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மீண்டும் அஜித், விஜய்யை வைத்து படம் இயக்குவது எப்போது என்ற கேள்விக்கு சுவாரஸ்யமான பதில் ஒன்றை கூறியுள்ளார்
இன்னும் சுமார் 10 ஆண்டு காலத்திற்கு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளதாகவும், அதன் பின்னர் 10 வருடங்கள் கழித்து அப்போதைய டிரண்டுக்கு இயக்குனராக ரீஎண்ட்ரி கொடுக்க உள்ளதாகவும், அந்த சமயத்தில் அஜித் பையனை வைத்து 'வாலி-2', மற்றும் விஜய் பையனை வைத்து 'குஷி-2' படம் இயக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். எஸ்.ஜே.சூர்யாவின் கனவு பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

நெடுவாசலுக்காக ஒரு பாடல். பிரபல இசையமைப்பாளர் திட்டம்

சமீபத்தில் நடந்து முடிந்த இளைஞர்களின் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு வெற்றி போராட்டத்தில் திரையுலகினர்கள் தந்த ஆதரவும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் ஜல்லிக்கட்டு குறித்த பாடல் ஒன்றை வெளியிட்டு போராட்டக்கார்களிடமும், மக்களிடமும் எழுச்சியை ஏற்படுத்தினர்...

அருண்ஜேட்லியுடன் பெப்சி நிறுவனத்தின் சிஇஓ அவசர ஆலோசனை

சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் பல இடங்களில் சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டத்தில் பெப்சி, கோக் உள்பட பல வெளிநாட்டு பானங்களை குடிப்பதை நிறுத்த வேண்டும்

தயாரிப்பாளர் சங்க தேர்தல். தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடைபெறும் என்றும், இந்த தேர்தலில் பதிவு செய்யப்படும் வாக்குகள் அன்றே எண்ணப்பட்டு அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதையும் சமீபத்தில் பார்த்தோம்...

'பாகுபலி 2' சிறப்பு காட்சியில் பிரதமர் மோடி, ராணி எலிசபெத்?

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி, உலகமே இந்தியாவை நோக்கி திரும்பி பார்க்கும் வகையில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது தயாராகி வரும் இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'பாகுபலி 2' படத்திற்கு முதல் பாகத்தை விட பலமடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...

தனுஷூக்கு டி.என்.ஏ சோதனை. மதுரை தம்பதியினர் மேலும் ஒரு மனு

பிரபல நடிகர் தனுஷை தனது மகன் என்று கூறி மதுரை மேலூரை சேர்ந்த  கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பதும், இந்த வழக்கின் விசாரணைக்காக நேற்று முன் தினம் தனுஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜரானார் என்பதும் தெரிந்ததே. அன்றைய விசாரணையில் தனுஷின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கவும் நீĪ