close
Choose your channels

குஷி-2, வாலி-2 படங்களின் ஹீரோக்கள் யார். எஸ்.ஜே.சூர்யா

Thursday, March 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'வாலி' மற்றும் விஜய் நடித்த 'குஷி' என தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களின் வெற்றி படத்தை இயக்கிய பெருமை பெற்றவர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. இந்த படங்களின் வெற்றியை அடுத்து அவர் பல படங்களை இயக்கி தற்போது பிரபல நடிகராக உள்ளார்.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'மகேஷ்பாபு 23' படத்திலும் 'விஜய் 61' படத்திலும் வில்லனாக நடித்து கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மீண்டும் அஜித், விஜய்யை வைத்து படம் இயக்குவது எப்போது என்ற கேள்விக்கு சுவாரஸ்யமான பதில் ஒன்றை கூறியுள்ளார்
இன்னும் சுமார் 10 ஆண்டு காலத்திற்கு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளதாகவும், அதன் பின்னர் 10 வருடங்கள் கழித்து அப்போதைய டிரண்டுக்கு இயக்குனராக ரீஎண்ட்ரி கொடுக்க உள்ளதாகவும், அந்த சமயத்தில் அஜித் பையனை வைத்து `வாலி-2', மற்றும் விஜய் பையனை வைத்து `குஷி-2' படம் இயக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். எஸ்.ஜே.சூர்யாவின் கனவு பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.