சூர்யாவை சூழ்ந்த 5000 பேர்: படப்பிடிப்பில் பரபரப்பு

  • IndiaGlitz, [Monday,August 27 2018]

சூர்யா நடிப்பில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'என்ஜிகே' படத்தின் படப்பிடிப்பு ராஜாமுந்திரியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன

சூர்யாவின் 'என்ஜிகே' படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடைபெறுகிறது என இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டதிலிருந்து. அந்த பகுதியில் உள்ள சூர்யா ரசிகர்கள் அவரை காண படப்பிடிப்பு தளத்துக்கு வந்தவண்ணம் உள்ளனர்

இந்த நிலையில் நேற்று சூர்யாவை காண படப்பிடிப்பு தளத்துக்கு குவிந்த ரசிகர்கள் கேரவனில் இருந்து வெளியே வந்த சூர்யாவை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சூர்யாவை சூழ்ந்து ராஜு பாய் , சூர்யா என்று கோஷங்கள் எழுப்பிய வண்ணம் அவருக்கு அன்பு வரவேற்பு அளித்தனர். சூர்யாவும் அவர்களுக்கு கையசைத்து அவர்களின் அன்பை ஏற்றுக்கொண்டார்.

தமிழகத்தை போலவே தெலுங்கு மாநிலங்களிலும் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா. எனவே நேற்றைய படப்பிடிப்பில் சூர்யாவை ரசிகர்களை சூழ்ந்ததால் இந்த படப்பிடிப்பு தமிழ் நாட்டில் நடக்கிறதா ? அல்லது ஆந்திராவில்லா ? என்று ஒரு யோசிக்க வைத்தது என்று தான் கூறவேண்டும்.

ட்ரீம் வாரியார் பிச்சர்ஸ் S.R. பிரகாஷ் பாபு , S.R. பிரபு தயாரித்து வரும் இந்த படத்தில் சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரித்திசிங் உள்பட பலர் நடித்து வருகின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் வரும் தீபாவளி விருந்தாக வெளிவரும் என கூறப்படுகிறது.

More News

மகத் வாழ்க்கையை சீரழித்த இரண்டு பெண்கள்: பிரபல நடிகை ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று மகத் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார். அவர் உள்ளே இருந்தபோது உள்ள கோபம் வெளியே போனபோது பலருக்கு ஏற்படவில்லை.

பிக்பாஸ் போட்டியாளர்களை சரியாக கணித்த விஜயலட்சுமி

பிக்பாஸ் வீட்டில் புதுமுகமாக சமீபத்தில் நுழைந்துள்ள நடிகை விஜயலட்சுமியிடம் போட்டியாளர்கள் குறித்த கருத்தை தெரிவிக்குமாறு கமல் கேட்டுக்கொண்டார்.

ஒண்ணுமே பேசலை, அதுக்குள்ள சிரிக்கிறீங்களே: 'அடங்காதே' ஆடியோ விழாவில் யோகிபாபு

ஜிவி பிரகாஷ், சரத்குமார் முதல்முறையாக இணைந்து நடித்த 'அடங்காதே' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற சீமானிடம் கேரள போலீசார் விசாரணை

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் அம்மாநில மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளான நிலையில் தமிழகத்தில் இருந்து அதிக நிதியும் நிவாரண பொருட்களும் குவிநது வருகிறது.

வெளியேறுகிறார் மகத்: யாஷிகா, ஐஸ்வர்யா நிலைமை என்ன?

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அதிக வெறுப்பை சம்பாதித்த மகத் வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது