சூர்யாவுடன் இணைந்த 'உறியடி' டீம்

  • IndiaGlitz, [Wednesday,September 19 2018]

நடிகர் சூர்யா திறமையான கலைஞர்களுக்கு தனது 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பேனரில் வாய்ப்பு கொடுப்பார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த 'உறியடி' படத்தின் இயக்குனர் விஜயகுமார் இயக்கும் அடுத்த படத்தை இந்நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது.

'உறியடி' திரைப்படம் வெளியானபோது எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்றாலும், அந்த படம் காலதாமதமாக ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இதனையடுத்தே 'உறியடி 2' தயாரிக்கும் திட்டம் விஜயகுமாருக்கு ஏற்பட்டது. இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரிக்க முன்வந்துள்ளதால் இந்த படம் தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.

'உறியடி 2' படத்தை இயக்குவது மட்டுமின்றி விஜயகுமார் இந்த படத்தில் முக்கிய கேரக்டரிலும் நடிக்கவுள்ளார். செப்டம்பர் 20 முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

More News

ஜெ.தீபாவின் உள்ளே-வெளியே விளையாட்டில் சிக்கிய ராஜா

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, உண்மையான அதிமுக தங்கள் அணிதான் என்று அவ்வப்போது கூறிக்கொண்டிருந்தாலும் தனக்கென ஒரு அணியை தொடங்கி அதன் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.

வங்கக்கடலில் சீற்றம்: 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சென்னையில் இரவு நேரத்தில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரவிந்தசாமி-ரெஜினா நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

'தனி ஒருவன்' படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ரீஎண்ட்ரி ஆன நடிகர் அரவிந்தசாமி தற்போது ஒரே நேரத்தில் சுமார் 6 படங்களில் நடித்து வருகிறார்.

பிக்பாஸூக்கு நன்றி கூறிய இயக்குனர் விக்னேஷ்சிவன்: ஏன் தெரியுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒருசில நாட்களில் முடிவுக்கு வரும் நிலையில் இந்த வாரம் இறுதி போட்டிக்கு செல்பவர்கள் யார் யார்?

'சர்கார்' கொண்டாட்டத்தின் முதல் அறிவிப்பு இதுதான்

;தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'சர்கார்' திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ள நிலையில் இன்றுமுதல் 'சர்கார்' கொண்டாட்டம் ஆரம்பம்