close
Choose your channels

அரவிந்தசாமி-ரெஜினா நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

Wednesday, September 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'தனி ஒருவன்' படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ரீஎண்ட்ரி ஆன நடிகர் அரவிந்தசாமி தற்போது ஒரே நேரத்தில் சுமார் 6 படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'செக்க சிவந்த வானம்' வரும் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் அவர் 'சதுரங்க வேட்டை 2', வணங்காமுடி', 'நரகாசுரன்' உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று அவர் நடிக்கவுள்ள புதிய படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. 'என்னமோ ஏதோ', 'அச்சமின்றி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராஜபாண்டி இயக்கும் இந்த படத்திற்கு 'கள்ளபார்ட்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரவிந்தசாமிக்கு ஜோடியாக ரெஜினாவும், மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆனந்த்ராஜூம் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்திற்கு கே.பிரசன்னா இசையமைக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தெகிடி, சேதுபதி, ஜீரோ, கூட்டத்தில் ஒருவன் ஆகிய படத்திற்கு இசையமைத்தவர் என்பதும் தற்போது 'கும்கி 2' உள்பட ஒருசில படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.