மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய்: முடிந்தது ரெய்டு பிரச்சனை

  • IndiaGlitz, [Friday,February 07 2020]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வந்த மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்யை விசாரிக்க வேண்டுமென கையோடு அழைத்து சென்றனர். இதனால் படக்குழுவினர் களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் இரண்டு நாட்களாக விஜய்யிடமும் அவரது குடும்பத்தினரிடம் வருமானவரித் துறையினர் விசாரணை செய்த நிலையில் நேற்று இரவு இந்த விசாரணை முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. விஜய் வீட்டிலிருந்து கணக்கில் வராத எந்த ஒரு ஆவணங்களும், ரொக்கமாக ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை என்று தெரியவந்தது

இந்த நிலைய்ல் வருமான வரித்துறையினர் சோதனை முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் விஜய் நெய்வேலியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் இதனால் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் எந்தவொரு தடையும் இல்லை என்பதால் திட்டமிட்டபடி வரும் ஏப்ரலில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா வைரஸ்.. திணறும் சீனா.. பாதிக்கப்பட்டவர்கள் 30,000.. பலி எண்ணிக்கை 636..!

சீனாவில் இருந்து வரும் தகவலின் அடிப்படையில் இதுவரை அங்கு 636 பேர் இறந்துள்ளனர். 30,000க்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ரகசிய திருமணம் ஏன்? யோகிபாபு விளக்கம்

நடிகர் யோகிபாபு பார்வையை நேற்று முன்தினம் தனது குலதெய்வம் கோவிலில் மஞ்சுபார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

திடீரென சாய்ந்து கொண்டிருக்கும் 5 மாடி குடியிருப்பு: பெங்களூரில் அதிர்ச்சி

பெங்களூரில் கட்டிடம் ஒன்று திடீரென சாய்ந்து கீழே விழாமல் தொங்கி கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

தமிழகத்தில் பாஜக மலர்ந்தே தீரும்: பிரபல நடிகர்

நாடு முழுவதும் செல்வாக்குள்ள கட்சியாக இருக்கும் பாஜக தமிழகத்தில் மட்டும் பின்தங்கி இருப்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தும்

வருமான வரி அதிகாரிகள் மீது விஜய் வழக்கு போடட்டும்: பாஜக பிரமுகர் கருத்து

'பிகில்' படத்தின் வசூல் குறித்த வெளியான மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை அடுத்து வருமான வரித்துறையினர் அந்த படத்தின் தயாரிப்பாளர்,