கொரோனாவால் பாதிக்கப்பட்ட அப்பாவின் உடல்நிலை: தமிழ் நடிகர் தகவல்

கன்னியாகுமரி தொகுதி எம்பியும், பிரபல தொழிலதிபரும் தமிழ் நடிகர் விஜய் வசந்தின் தந்தையுமான வசந்தகுமார் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று வசந்தகுமார் எம்பியின் ஆக்சிஜன் அளவு குறைய தொடங்கியதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் தனது அப்பாவின் உடல்நிலை குறித்து நடிகர் விஜய் வசந்த் கூறியதாவது:

அப்பாவிற்கு சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட எந்த அறிகுறியும் இல்லாமல் திடீரென கொரனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பரிசோதனை செய்து முடித்தவுடன் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. அப்பாவை எடுத்து அம்மாவுக்கும் கொரோனா இருந்தது பரிசோதனை தெரிய வந்ததை அடுத்து இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர்.

மேலும் அப்பாவிற்கு சர்க்கரை நோய் தவிரை வேறு எந்த இணைநோயும் இல்லை. அவர் படிப்படியாக குணமாகி வந்த நிலையில் நேற்று திடீரென ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மயக்க நிலையில் இருக்கிறார். வெண்டிலேட்டர் கண்காணிப்பில் இருந்தாலும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்’ என்று நடிகர் விஜய்வசந்த் தெரிவித்துள்ளார்.

More News

ஆசை ஆசையாய் அமெரிக்காவில் இருந்து வந்த கணவனை வீதியில் நிறுத்திய மனைவி: கொரோனா படுத்தும்பாடு

ஆசைஆசையாக மனைவியையும் குழந்தையையும் பார்க்க அமெரிக்காவில் இருந்து வந்த கணவர் ஒருவரை வீதியில் நிறுத்திய மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இரண்டு முறை திருமணம் செய்த கோடீஸ்வரர் மகள்: திடீரென மர்ம மரணம்!

கோடீஸ்வரர் ஒருவரின் மகள் இரண்டு முறை திருமணம் செய்ததாகவும் அதன்பின்னர்  திடீரென அவர் சில காலம் மாயமாகி, மீண்டும் சொந்த ஊர் வந்து லாட்ஜ் அறை ஒன்றில் தங்கிய நிலையில் மர்மமான

அடங்காத கொரோனாவால் பொதுத்தேர்தலை தள்ளிவைத்த அதிபர்!!!

நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களுக்கு மேல் புதிய கொரோனா பாதிப்பு எதுவும் இல்லாத நிலையில் உலகளவில் நியூசிலாந்தை பற்றிய செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

கொரோனா காலத்தில் தமிழக ரேஷன் கடைகளில் இலவச கோதுமை!!! பாதிப்பைக் குறைக்க சிறப்புத் திட்டங்கள்!!!

கொரோனா ஊரடங்கினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த 5 மாதங்களாக கடுமையாகப் பாதிக்கப்பட்டது

ஒருநாள் முழுக்க, ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்க்கிய பரபரப்பு சம்பவம்!!!

இலங்கையின் முக்கிய மின்சார வழித்தடத்தில் ஏற்பட்ட பாதிப்பால் நேற்று ஒட்டுமொத்த இலங்கையும் இருளில் மூழ்கியிருந்ததாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.