சூர்யா, விஜய்சேதுபதியை அடுத்து புனித் ராஜ்குமாருக்கு மரியாதை செலுத்திய பிரபலம்

  • IndiaGlitz, [Wednesday,November 17 2021]

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமானார் என்பதும் அவரது மறைவு கன்னட திரையுலகிற்கு மட்டுமின்றி இந்திய திரை உலகிற்கே மிகப்பெரிய இழப்பாக கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி உள்பட பல அரசியல்வாதிகளும், அனைத்து இந்திய திரை உலகினர்களும் அவரது மறைவிற்கு தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புனித் ராஜ்குமாரின் இல்லத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் சென்று அவரது புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஏற்கனவே சூர்யா, விஜய் சேதுபதி உள்பட பல நடிகர்கள் புனித் ராஜ்குமார் இல்லத்திற்கு சென்ற நிலையில் தற்போது நடிகர் விஷால், புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்று அவருடைய புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

மகள் பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடும் மணிரத்னம் பட நடிகை!

இந்தியச் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்துவரும் நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய செல்ல மகளின் 10 ஆவது பிறந்த நாளை நேற்று

மலை முகட்டில் திருமண நாளை கொண்டாடிய நட்சத்திர தம்பதி… வைரல் புகைப்படம்!

பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான ரன்வீர் சிங்- தீபிகா படுகோனே இருவரும் தங்களது மூன்றாம் ஆண்டு திருமண விழாவை

திருப்பூரில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்பூர் மாவடத்தில் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து

அபிஷேக்கின் வைல்ட்-கார்ட் எண்ட்ரி எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 45 நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதும்

கண்ணாடி டாஸ்க்கில் மனம் திறந்த ராஜூ: சிரித்து சிரித்து மழுப்பிய பிரியங்கா!

பிரியங்காவின் நரித்தனத்தை கண்ணாடி டாஸ்க் மூலம் ராஜு காமெடியாக கூறியதை சிரித்து சிரித்து மழுப்பிய பிரியங்காவின் காட்சிகள் இன்றைய மூன்றாவது புரமோவில் உள்ளன.