மாஸ் நடிகருடன் இணைந்த விஷ்ணுவிஷால்: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,January 07 2022]

தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய விஷ்ணுவிஷால் மாஸ் நடிகருடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்து, அது குறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி அதன் பின்னர் ’குள்ளநரிக்கூட்டம்’ ’முண்டாசுபட்டி’ ’இன்று நேற்று நாளை’ ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ ’ராட்சசன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் விஷ்ணுவிஷால் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஆரண்யா’ ’எஃப்ஐஆர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் விஷ்ணு விஷால் தற்போது பிரபல தெலுங்கு மாஸ் நடிகர் ரவி தேஜா உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்

இந்த ஆண்டு தனக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக தொடங்கி உள்ளது என்றும் மாஸ் மகாராஜா ரவிதேஜா அவர்களுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளேன் என்றும் அவருடன் நடந்த இந்த சந்திப்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

More News

'மாநாடு' படத்துடன் கனெக்சன் ஆன 'வீரமே வாகை சூடும்'

நடிகர் சிம்புவின் 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த படத்த்தின் தமிழக திரையரங்குகள் ரிலீஸ் உரிமையை

'விக்ரம்' படத்தில் இணைந்த கமல்ஹாசனின் விருப்பத்துக்குரிய நடிகர்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அவ்வப்போது புதுப்புது நடிகர்கள்

தனுஷின் ஹாலிவுட் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடித்து முடித்துள்ள ஹாலிவுட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சன்னிலியோன் செய்த வேறலெவல் சேலஞ்ச்… வைரல் வீடியோ!

நாம் எப்போதும் விளையாட்டுத்தனமாக அதே நேரத்தில் சவாலான

நடிகை நீலிமா இசை வீட்டிற்கு வந்த லிட்டில் இளவரசி: குவியும் வாழ்த்துக்கள்!

திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையான நீலிமா இசை தனது வீட்டிற்கு லிட்டில் இளவரசி வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.