close
Choose your channels

மாஸ் நடிகருடன் இணைந்த விஷ்ணுவிஷால்: வைரல் புகைப்படம்!

Friday, January 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய விஷ்ணுவிஷால் மாஸ் நடிகருடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்து, அது குறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி அதன் பின்னர் ’குள்ளநரிக்கூட்டம்’ ’முண்டாசுபட்டி’ ’இன்று நேற்று நாளை’ ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ ’ராட்சசன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் விஷ்ணுவிஷால் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஆரண்யா’ ’எஃப்ஐஆர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் விஷ்ணு விஷால் தற்போது பிரபல தெலுங்கு மாஸ் நடிகர் ரவி தேஜா உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்

இந்த ஆண்டு தனக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக தொடங்கி உள்ளது என்றும் மாஸ் மகாராஜா ரவிதேஜா அவர்களுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளேன் என்றும் அவருடன் நடந்த இந்த சந்திப்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment