செல்ல மகளுக்கு அழகு தமிழ் கற்றுக்கொடுக்கும் கன்னட நடிகர்… வைரலாகும் வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,January 22 2022]

இந்தியா சினிமாவில் ராக்கிங் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் யஷ் தனது செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

நவீன் குமார் கவுடா என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகர் யஷ் கடந்த 2008 ஆம் ஆண்டு “மோகினா மனசு“ எனும் கன்னடத் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அடுத்து இவரது நடிப்பில் வெளியான “கேஜிஎஃப்“ திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகராக மாறிப்போனார். இதனால் ரசிகர்கள் அவரை ராக்கிங் ஸ்டார் என்றே அழைத்து வருகின்றனர்.

நடிகர் யஷ் கன்னட சினிமா நடிகையான ராதிகா பண்டிட்டை கடந்த டிசம்பர் 2016இல் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு டிசம்பர் 2018இல் அய்ரா எனும் பெண் குழந்தையும் அக்டோபர் 2019 இல் யாதர்வ் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. இதில் அய்ரா சுட்டித்தனமான க்யூட் எக்ஸ்பிரசனைக் காட்டி ஏற்கனவே மீடியாக்களில் பிரபலமாகி வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது அப்பாவுடன் விளையாடிய குழந்தை அய்ரா தமிழ் உயிரெழுத்துகளை அச்சுப் பிசகாமல் சொல்லி நம்மையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

More News

குழந்தைகளுக்கான ஒமிக்ரான் அறிகுறிகள்… எச்சரிக்கை தகவல்!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் 3 ஆவது அலைத்தாக்கம்

'குக் வித் கோமாளி 3' ஆரம்பமே அமர்க்களம்: பரத்தை விரட்டி விரட்டி அடிக்கும் வெங்கடேஷ் பட்

'குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இன்று முதல் சீசன் 3 ஆரம்பமாக உள்ளது என்பதும் இந்த சீசனுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு

இந்தியாவில் முதல் மெட்டாவெர்ஸ் திருமணம்… தமிழகத் தம்பதிகள் அசத்தல்!

டிஜிட்டல் உலகின் அசத்தல் சாதனைகளுள் ஒன்றான மெட்டாவெர்ஸ்(விர்ச்சுவல் ரியாலிட்டி) முறையில் தமிழகத்தைச் சேர்ந்த

கே.டி.குஞ்சுமோனின் 'ஜெண்டிமேன் 2': அறிவிப்பிலேயே ரசிகர்களுக்கு தங்கக்காசு பரிசு!

பிரபல தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் தயாரிப்பில் அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய திரைப்படம் 'ஜென்டில்மேன்'. கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில்தான் ஷங்கர் அறிமுகமானார்

மலக்குடலில் வைத்து தங்கம் கடத்தல்… பிடிபட்டது எப்படி?

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஆசனவாய்