close
Choose your channels

கேப்டன் விஜயகாந்தை நேரில் சந்தித்த யோகிபாபு

Saturday, March 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு தற்போது அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஹீரோவாகவும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி யோகிபாபு, மஞ்சுபார்கவி என்ற பெண்ணை அவரது குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் யோகிபாவின் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் மட்டும் நடைபெற்றது. ஆனால் வரும் ஏப்ரல் மாதம் அனைவரையும் அழைத்து திருமண வரவேற்பு நடத்த போவதாக யோகிபாபு அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில், இன்று, பிரபல நடிகரும், அரசியல்வாதியும், தேமுதிக தலைவருமான விஜய்காந்த்தை யோகிபாபு நேரில் சந்தித்து, தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை கொடுத்தார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பின்போது விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் அருகில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos