முகக்கவசம் இல்லாமல் பயணம் செய்த தமிழ் நடிகைக்கு அபராதம்: சுகாதாரத் துறை அதிரடி 

  • IndiaGlitz, [Saturday,October 17 2020]

கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக மிக வேகமாக பரவி வரும் நிலையில் உலக சுகாதார மையம் முதல் உள்ளூர் சுகாதார துறை வரை அனைத்து மக்களும் மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாஸ்க் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முக கவசம் அணியாமல் காரில் பயணம் செய்த தமிழ் நடிகை ஒருவருக்கு ரூபாய் 200 அபராதம் விதித்து சுகாதாரத் துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

’அருவி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன். இவர் தற்போது இரண்டு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் கொடைக்கானலுக்கு முகக்கவசம் இல்லாமல் காரில் பயணம் செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அருவி பட நாயகி அதிதி பாலனுக்கு ரூ.200 அபராதம் விதித்து சுகாதாரத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இனிமேல் முகக்கவசம் இல்லாமல் பயணம் செய்யக்கூடாது என்று அவருக்கு அதிகாரிகள் அறிவுரை கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

More News

என் பட்டத்தை நீங்க எடுத்துட்டீங்களே: அர்ச்சனாவை அர்ச்சனை செய்த கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்து அனைத்து போட்டியாளர்களுக்கும் பட்டங்களை கொடுத்தார் என்பது தெரிந்ததே.

'சூரரை போற்று' ஓப்பனிங் ரீல் இதுதான்: ஜிவி பிரகாஷ் வெளியிட்ட வீடியோ!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சூரரை போற்று'திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன 

எங்களால் இந்தியாவையே கூறுபோட்டு பிரிக்க முடியும்… கோபத்தில் கொந்தளிக்கும் சீனா!!!

சீனா பல ஆண்டுகளாகவே ஹாங்காங், தைவான் போன்ற பகுதிகளை தனது அதிகாரத்தின்கீழ் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது.

சுரேஷுக்கு ஹார்ட் கொடுத்த பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் முதலில் அனைத்து போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வில்லனாக தெரிந்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி. அனிதா சம்பத்துடன் எச்சில் விவகாரம்,

திமுக எம்.பி.கௌதம சிகாமணியின் சொத்துக்கள் முடக்கம்… விதிமுறைகளைமீறி வருவாய் ஈட்டியதால் நடவடிக்கை!!!

கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி. கௌதம சிகாமணியின் ரூ.8.6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.