பட வாய்ப்புக்காக படுக்கை பகிர்வு: அதிர்ஷ்டத்தால் தப்பியதாக தமிழ் நடிகை பேட்டி

  • IndiaGlitz, [Friday,July 10 2020]

பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் திரையுலகில் இருப்பதாக தமிழ் திரையுலகில் இருந்து மட்டுமன்றி, இந்தியத் திரையுலகில் மட்டுமன்றி, ஹாலிவுட்டிலும் குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இது குறித்து திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறினார் என்பதும் அவர் குற்றச்சாட்டுகளைக் கூறிய நபர்கள் அனைவரும் திரையுலகில் மிகவும் பிரபலமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கும் நிலையில் இதுகுறித்து பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ’காற்று வெளியிடை’ என்ற திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை அதிதி ராவ் ஹைத்ரி சமீபத்தில் பேட்டியளித்த போது அவரிடம் ’பட வாய்ப்புக்காக நடிகைகள் படுக்கையை பகிர கட்டாயப்படுத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

திரை உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அனுபவங்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்கின்றார்கள் என்றும், சிலர் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து புத்திசாலித்தனமாக தப்பி விடுகிறார்கள் என்றும் ஆனால் சில அப்பாவி நடிகைகள் இதில் மாட்டி கொள்கிறார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் நான் நல்ல வேளையாக எனது அதிர்ஷ்டம் காரணமாக இதுபோன்ற பிரச்சினையில் இருந்து தப்பினேன்’ என்றும் அதிதிராவ் ஹைத்ரி கூறியுள்ளார்

More News

கொரோனா பரவல்: குழந்தைகளின் மனநலனைக் காக்க என்ன செய்யலாம்???

கொரோனா உலக மக்களின் மனநிலையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

ஐஸ்வர்யாராயுடன் மீண்டும் இணையும் விக்ரம்: செப்டம்பரில் படப்பிடிப்பு?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடித்த 'ராவணன்' திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

டோனி கிரிக்கெட்டில் இருந்து நிரந்தர ஓய்வா??? மனேஜர் அளித்த பரபரப்பு விளக்கம்!!!

இந்தியக் கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக இருந்து வரும் டோனி ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிவிட்டார்.

பிரேசிலை தொடர்ந்து இன்னொரு நாட்டின் அதிபருக்கும் கொரோனா தொற்று!!! அதிர்ச்சித் தகவல்!!!

ஒரு நாட்டின் அதிபருக்கே கொரோனா நோய்த்தொற்று ஏற்படும்போது அந்நாட்டின் அரசாங்கமே ஸ்தம்பித்து விடும் அபாயமும் இருக்கத்தான் செய்கிறது

மேலும் ஒரு தமிழக அமைச்சருக்கு கொரோனா: மொத்தம் 3 அமைச்சர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு

தமிழகத்தில் ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் மின் துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே