close
Choose your channels

பாஜகவில் இருந்து விலகிய நடிகை அதிமுகவில்.. எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார்..!

Friday, January 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வருடங்களாக பாஜகவில் இருந்த நடிகை சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அவர் அதிமுகவில் இணைந்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக நடிகை மற்றும் நடன இயக்குனர் ஆன காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்தார். ஆனால் பாஜகவில் அண்ணாமலை தமிழக தலைவராக பதவியேற்ற பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனை அடுத்து அவர் பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகினார் என்பதும் அண்ணாமலை உட்பட பல பாஜக தலைவர்கள் மீது பல்வேறு விமர்சனம் வைத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விரைவில் காயத்ரி ரகுராம் அதிமுக அல்லது திமுகவில் இணைவார் என்று கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.