தந்தை மறைவுக்கு பின் நடிகை ரவீனா பதிவு செய்த நெகிழ்ச்சியான வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,August 31 2021]

பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் நடிகை ரவீனா ரவியின் தந்தை ரவீந்திரநாத் சில மணி நேரங்களுக்கு முன்னர் திடீரென காலமானார் என்ற செய்தி திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதனையடுத்து திரையுலகினர் பலர் ரவீணாவின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ரவீணாவின் தந்தை ரவீந்திரநாத் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதி சடங்கு கேரளாவில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் தந்தையின் மறைவிற்குப் பின்னர் ரவீணா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரது தந்தை ’மூன்றாம் பிறை’ படத்தில் இடம்பெற்ற ’கண்ணே கலைமானே’ என்ற பாடலை பாடுவது போன்ற காட்சி உள்ளது. இந்த பதிவில் ரவீனா ’தெய்வம் சதி செய்தது, நீங்கள் எப்போதுமே அம்மா மற்றும் என்னுடன் வாழ்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது’ என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ பார்ப்பவர்களை கண்கலங்க செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நயன்தாராவின் அடுத்த பட டைட்டில் இதுதான்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' மற்றும் விக்னேஷ் சிவனின் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' உள்பட 4 தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பதும்

கமல்ஹாசனின் 'விக்ரம்' பட பாணியில் படத்தை தொடங்கும் அட்லி!

கமல்ஹாசன் நடித்து வரும் 'விக்ரம்' படத்தின் பாணியில் அட்லி தனது அடுத்த படத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

விஷால் படங்களிலேயே அதிக பட்ஜெட் படம் இதுதான்; தயாரிப்பாளர் யார் தெரியுமா?

நடிகர் விஷால் நடித்து வரும் 31ஆவது திரைப்படம் 'வீர்மே வாகை சூடும்' என்ற திரைப்படம் என்றும் து.பா.சரவணன் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. 

பாரா ஒலிம்பிக் போட்டி: தமிழக வீரர் மாரியப்பனுக்கு பதக்கம்!

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின்

ராஜ்குந்த்ரா ஆபாச பட விவகாரம்: ஷில்பா ஷெட்டி எடுத்த அதிரடி முடிவு?

ஆபாச பட வழக்கில் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கணவர் ராஜ்குந்த்ராவை ஷில்பா ஷெட்டி பிரிய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.